search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மவுன ஊர்வலம்"

    சுனாமி 14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். #Tsunami #MemorialDay
    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி என்னும் ஆழிப்பேரவை எழுந்தது. இதனால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர் உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை பகுதிகளை வாரி சுருட்டின. இதில் மொத்தம் 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சுனாமி பேரலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 65 பேர் இறந்தனர். மீனவர்களின் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதமானது.

    இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதிய இடம் இல்லாததால் ஒரே குழிக்குள் 25 உடல்கள் வரை புதைக்கப்பட்டன சுனாமியில் உருக்குலைந்த நாகை மாவட்டம் மீண்டு வர பல மாதங்கள் ஆனது.

    இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், மற்றும் உற்றார்-உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.

    சுனாமியின் கோரத்தாண்டவத்தில பலியான வர்களின் நினைவாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் நினைவிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, தரங்கம்பாடி, பூம்புகார், சின்னகுடி, பொறையாறு, சந்திரபாபு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாகையில், மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில், பாலை ஊற்றி, சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவர் கிராமத்தில் இன்று 14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் கடலுக்கு சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். பின்னர் சுனாமி நினைவிடத்திற்கு வந்து அங்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

    நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி.விஜயகுமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் இன்று பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  #Tsunami #MemorialDay
    மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குளித்தலை ஒன்றிய நகர பா.ஜ.க சார்பில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    குளித்தலை:

    குளித்தலையில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குளித்தலை ஒன்றிய நகர பா.ஜ.க சார்பில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் குளித்தலை பெரியபாலத்தில்   தொடங்கி, வைசியாள் தெரு,  மாரியம்மன் கோவில் கடைவீதி ஆண்டாள்வீதி, காந்திசிலை, பேருந்து  நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக சுங்க வாசலை சென்றடைந்தது. 

    ஊர்வலத்திற்கு குளித்தலை  நகர பா.ஜ.க தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் முருகானந்தம், ஒன்றியத் தலைவர் வீரமணி, மாவட்ட பொதுச் செயலாளர் கைலாசம்,  மாவட்ட துணை தலைவர் ராமநாதன், மாவட்டச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பிரச்சாரப்பிரிவு தலைவர் சாமிநாதன், நகர பொதுச் செயலாளர்கள் மோகன், சீனிவாசன், செயலாளர்கள் பிரகதீஸ்வரன், ராமன், நகர துணை தலைவர் சங்கிலி, மாவட்ட இளைஞரணிதலை வர் சக்திவேல், ஒன்றிய பொது செயலாளர் கண்ணன், சிவக்குமார், அறிவு ஜீவி, தலைவர் சம்பத் சிவசேனா, கஸ்தூரிரங்கன் நமச்சிவாயம் திமுக விவசாய அணி பாலசுப்பிரமணியன், அவைத்தலைவர்ஹாகுல் ஹமீது, துணைச் செயலாளர் செந்தில்குமார், ம.தி.மு.க நகரச்செயலாளர் ரவிக்குமார், நகர இளைஞரணி தலைவர் பிரதீப், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமரேசன், விவசாய அணி தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி சிங்கம்புணரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
    சிங்கம்புணரி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி சிங்கம்புணரியில் அனைத்து கட்சியினர்கள் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் விதமாக சிங்கம்புணரி புசலியம்மாள் மருத்துவமனை முன்பு இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் மவுன ஊர்வலமாக வந்து சிங்கம்புணரி அண்ணாசிலை முன்பு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதையொட்டி சிங்கம்புணரி பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மவுன ஊர்வலத்தில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமார், நகர தலைவர் வசிகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராம, அருணகிரி, மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் சிங்கை தருமன், காங்கிரஸ் நகர தலைவர் பழனிவேல்ராஜன் மற்றும் தி.மு.க சார்பில் நகரச் செயலாளர் யாகூப், பொதுக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், அம்பலமுத்து, அ.தி.மு.க சார்பில் முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொன்பகீரதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் புதுக்கோட்டை நகர பா.ஜ.க. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த, அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாலையில் நகர பா.ஜ.க. சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், நகர பொது செயலாளர் சுரேஷ், கட்சி நிர்வாகிகள் மற்றும் வர்த்தக கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணமேல்குடியில் வணிகர் சங்க தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒருமணி நேரம் கடைகளை அடைத்து கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

    பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் சேதுபதி தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஆலங்குடியில் அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல கறம்பக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதேபோல கந்தர்வகோட்டையில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் கார்த்திக்கேயன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றது.
    கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. வாரியங்காவல் பஸ் நிறுத்தத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக இலையூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெங்கமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர்தொண்டரணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன் வரவேற்றார். இதில் செல்ல மணிமாறன், இளவரசன், புலவர் பரமசிவம், கிரேஸ் சுப்பிரமணியன், சிவமுத்து மயில்வாகணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    நாகர்கோவிலில் நாளை கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மவுன ஊர்வலம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கிறது. #karunanidhideath #dmk
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் களத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் நின்று வெற்றிகண்ட மாமனிதர் உலக மக்களின் இதயங்களில் வாழும் தலைவர் கருணாநிதி.

    அவருக்கு அஞ்சலி செலுத்த நாளை (12-ந்தேதி) மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையிலும், அனைத்து தோழமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் முன்னிலையிலும் மவுன ஊர்வலம் நடக்கிறது. 

    இந்த ஊர்வலம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, வடசேரி, மணி மேடை வழியாக நாகர்கோவில் பூங்காவுக்கு வந்து சேரும். இந்த ஊர்வலத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தமிழ் ஆர்வலர்கள், வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  #karunanidhideath #dmk
    ×